மிக பிரமாண்ட முறையில் தயாராக உள்ள “அனுநாகி” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

222
மிக பிரமாண்ட முறையில் தயாராக உள்ள “அனுநாகி” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
மோகன்லால் நடித்த ‘புலி முருகன்’ படத்தைத் வசனம் எழுதிய  ஆர்.பி.பாலா ‘அகோரி’ என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில் இப்போது அடுத்து ‘அனுநாகி ‘ படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். 
 
“அனுநாகி” தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல்  ‘இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம்  என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு  , காமெடி பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் வகையில் படமாக்கவுள்ளனர்.
முக்கியமான நட்சத்திரங்கள் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். 
 
ஐஸ்வர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் மூன்று வில்லன்கள் .மைம்கோபி,ரியாஸ்கான், தமிழ் ,தெலுங்கு , இந்தியில் பிரபலமான ‘காலா’ படப்புகழ் ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். ‘ராட்சசன் ‘பட வில்லன் சரவணன், ராஜா ‘ரங்குஸ்கி’ விஜயசத்யா,ஆதவ்,’தொடரி ‘ராஜகோபால்,ரியமிகா,சம்யுக்தா,ஆங்கிலோ இந்தியன் ரிச்சர்ட் ஆகியோரும் நடிக்கிறார்கள். தெலுங்கில் முக்கியமான நடிகர் ஒருவர்  எதிர்பாராத கதாபாத்திரத்தில்  நடிக்கிறார்,  ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து ‘அனுநாகி’ படத்தை தயாரிக்கின்றனர். 
 
இப்படத்தின்  ஒளிப்பதிவு-விசாக் இசை – ஸ்ரீ சாஸ்தா எடிட்டிங் – பாசில் ,ஸ்டண்ட் – டேஞ்சர் மணி ,  மற்றும்  சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பலரும்  இப்படத்தில் பணி புரிகின்றனர்.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆர். பி.பாலா எழுத அறிமுக இயக்குநர் ஜெகதீஷ். D படத்தை இயக்குகிறார்,  மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *