வளர்ந்து வளரும் இளம் இயக்குனர் மகாவிஷ்ணு

273

வளர்ந்து வளரும் இளம் இயக்குனர் மகாவிஷ்ணு


, தான் புதிதாக இயக்கப் போகும் கதையைப் பற்றி சில நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அதுபோன்ற அவருடைய நெருங்கிய நண்பரிடமும் கூறியிருக்கிறார். அந்த நண்பர் மகாவிஷ்ணுவுக்கு மட்டும் இளைய தளபதிக்கு நெருக்கமானவர். அவருடன் நேரடியாக போனில் தொடர்புகொண்டு பேசக் கூடியவர், அதுமட்டுமல்லாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இளைய தளபதியை நேரில் சென்றும் சந்திக்கக் கூடியவர். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான், தன்னுடைய நண்பர் மகாவிஷ்ணு என்றும், துருவங்கள் 16 படத்தின் கேரளா விநியோகஸ்தர் அவர்தான் என்றும், அவரின் கதையைப் பற்றியும் கூறியிருக்கிறார். பாதிக் கதையை கேட்டவுடனேயே இளைய தளபதி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று சிறிது நேரம் பேசாமல் மௌனம் காத்துவிட்டு, மிகவும் நல்ல கதையாக இருக்கிறது, அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை அவரிடம் கூறுங்கள் என்று சொல்லியிருக்கிறார் இளையதளபதி. வளர்ந்து வரும் இயக்குனர்களையும் மனதார பாராட்டும் பெரிய மனது கொண்டதால்தான் மக்கள் மனதில் என்றும் அவர் இளையதளபதியாகவே இருக்கிறார். இதைக் கேட்டவுடனேயே படத்தின் மொத்த குழுவினர்களும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், ஒரு சிறந்த திரைப்படத்தைக் கொடுக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது. பல தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் பாராட்டி வருகின்றனர்.

 

img-20170729-wa0008
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *