`சுமங்கலி’ நாயகியை மணக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்

245

சன் டிவியில் பகல் 12 மணிக்கு ஒளிப்பரப்பாகும் `சுமங்கலி’ நெடுந்தொடரின் நாயகி திவ்யாவை மணக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்.

இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். திவ்யாவும் எனது சொந்த ஊரான இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் தான். இருவரும் சந்தித்து பேசினோம். ஒருவரை ஒருவர் பிடித்துவிட்டதால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தோம். மற்றபடி இது காதல் திருமணம் கிடையாது என்றும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான் என்றும் மூன்று படங்களில் நாயகனாக நடித்து வரும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்.

திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் திவ்யாவை சினிமாவில் நடிக்க வைப்பீர்களா? என்ற நிருபரின் கேள்விக்கு ஜோதிகா மாதிரி நடிக்க விருப்பப்பட்டால் தாராளமாக நடிக்கட்டும். அதுமட்டுமல்லாமல் எனக்கு ஜோடியாக நடித்தால் கதாநாயகி சம்பளம் எனக்கு மீதியாகும் என கலகலப்பாக பதிலளித்தார்.

– ஹேமா

 

divya-suresh
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *