ரஜினி எனக்கு கடவுள் ஆனால் கமலுக்கு தான் எனது ஆதரவு – ஆர்.கே.சுரேஷ் பளீர்

199

இன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பளீரென்று பதில்களை கூறினார்.

கே: அரசியலுக்கு வருவதாக கூறுகிறீர்கள் அப்படியென்றால் உங்கள் ஆதரவு ரஜினிக்கா? கமலுக்கா?

ப: நிச்சயமாக கமலுக்கு தான். ஏனென்றால் பல வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி கொண்டே இருக்கிறார் ரஜினி. ஆனால் கமல் அப்படியில்லை. அவர் சொன்னதை செய்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் அவரின் அமைப்பு நன்றாக உள்ளது. ஆகையால் எனது ஆதரவு கமலுக்கு தான்.

கே: கமல் 100 நாட்கள் திட்டம் என்று சொல்கிறார் பிக்பாஸ் போல, அவர் ஜெயித்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

ப: ஆம் ஆத்மி கட்சி கூட குறைந்த காலத்தில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா? அதுபோல் கமலுக்கு ஆதரவு தெரிவித்து 5 வருடம் காத்திருங்கள். கமல் பற்றி கூற வேண்டுமானால் க்ஷக்ஷஊ-யை பார்த்திருந்தால் அவருடைய அறிவைப் பற்றி தெரிந்திருக்கும். மேலும் அவருக்கு பரிசுகளை விட புத்தகத்தைத்தான் விரும்புவார் என்பதே அதற்கு சாட்சி.

கே: ஜாதி அரசியல்வாதிகளை ஆதரிப்பீர்களா?

ப: நிச்சயம் மாட்டேன். ஜாதியை சார்ந்து யாரும் தமிழ்நாட்டை ஆள முடியாது. எனது குடும்பத்தில் உள்ளவர்கள் வேறு வேறு கட்சிகளை சார்ந்தவராக இருந்தபோதிலும் எனக்கு பிடித்தவரை தான் நான் ஆதரிப்பேன்.

கே: விஜய் கூட தான் அரசியலுக்கு வரபோவதாக கூறுகிறார். அவருக்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா?

ப: கமலுக்கு ஆதரவு தருவேன் என்று நானே தானே கூறினேன்.

கே: சினிமாவை தவிர வேறு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

ப: கடந்த பத்து வருடங்களாக `களஞ்சியம்’ டிரஸ்டை நடத்தி வருகிறோம். இதன் மூலம் 3000 ஆயிரம் பேருக்கு கல்வி உதவி செய்து வருகிறோம். இதுபோல் பல உதவிகளை செய்து வருகிறோம்.

மேலும் படம் எடுப்பது குறைய வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர் நஷ்டம் அடையாமல் இருப்பார்கள் என்று கூறினார். குணா மாதிரி படமெடுக்க ஆசை என்றார்.

– ஹேமா

 

rks
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *