முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளர் ‘சோ’வும் மறைந்தார்

165

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி காலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா சோவை சந்தித்து உரையாடினார். அதன்பிறகு உடல்நலம் தேறி வீட்டிற்குத் திரும்பி வந்த அவர், பின்னர் ஏப்ரல் மாதம் மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சோவுக்கு மீண்டும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் சோ ராமசாமி.

துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் ‘அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடம் வகுத்து தந்தது.

82 வயதான இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

cho-copy
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *