கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் ஸ்டுடியோ-9 ஆர்.கே.சுரேஷ்

201

விஜய் சேதுபதி நடித்த `தர்மதுரை’, விஜய் ஆண்டனி நடித்த `சலீம்’ படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ-9 ஆர்.கே.சுரேஷ். இவர் சாட்டை, தாரைதப்பட்டை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளார். இவரின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் `தாரைதப்பட்டை’ படம் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாலா. அதை தொடர்ந்து `மருது’ படத்தில் வில்லனாக நடித்த இவர் தற்போது விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச், உதயநிதியுடன் ஒரு படம், ஹரஹரமஹாதேவகி, பள்ளிப் பருவத்திலே ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் பில்லா பாண்டி, வேட்டை நாய், தனிமுகன் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வரும் இவர் மேலும் பல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். பில்லாபாண்டி படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்தபோது தான் பெப்ஸி பிரச்சனை உருவானது குறிப்பிடத்தக்கது.

 

Producer RK Suresh @ Tharai Thappattai Movie Press Show Stills

Producer RK Suresh @ Tharai Thappattai Movie Press Show Stills
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *